பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

4 months ago 16

 

சிவகங்கை, ஜன. 11: இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். இளையான்குடி 4வது வார்டு பகைவரை வென்றான் பகுதியில் கடந்த ஒரு மாதமாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் காலிக்குடங்களுடன் இணையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய பெண்களிடம் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் நடத்திய பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post பேரூராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article