புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஏப்.9) தொடங்கினர்.
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.