சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.