சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், “குழந்தைகள் மையம் கட்டுகிற இடங்களில் பல கிராமங்களில் இடம் இல்லாமல் இருக்கிறது. தற்போது புதிதாக அதனுடைய டிசைன் பெரிய அளவில் இருக்கிறது. அதனால், கிராமங்களில் குழந்தைகள் மையங்கள் கட்டப்படாமல் இருக்கின்றன. எனவே, குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற கிராமங்களில், பழைய முறையிலேயே கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?. இதுபோன்ற பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு இடங்களில் இடம் கிடைக்காத நிலையை உணர்ந்து, அங்கு படிக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கைக் கருத்தில்கொண்டு, அதற்கேற்ற அளவிற்கு டிசைன் அமைக்கப்படுமா?’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில்,‘‘புதிய கட்டிடம் கட்ட இடம் இல்லாத சூழ்நிலையில், பழைய கட்டிடத்தை இடித்துக் கட்டுவதற்கு அனுமதி தருகிறோம். அதேபோல், குறைவான இடமே இருந்தால், இப்போது உள்ள டைப் டிசைன்படி கட்டாமல், அந்த குறைவான இடத்திற்குள் டிசைன் செய்து கட்டிக்கொள்ளலாம். அதற்கும் நிச்சயமாக அனுமதி தருகிறோம். அதுகுறித்த விவரங்களை நீங்கள் தெரியப்படுத்தும்போது அனுமதி அளிக்கப்படும்” என்றார்.
The post பேரவையில் அமைச்சர் விளக்கம்; பழைய முறையில் குழந்தைகள் மைய கட்டிடம் கட்டப்படுமா? appeared first on Dinakaran.