“பேரவை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து ஆகவில்லை, மாறாக...” - மதுரையில் அண்ணாமலை பேச்சு

6 hours ago 1

மதுரை: “மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் டங்ஸ்டன் திட்ட ரத்து பாராட்டு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “பிரதமர் மோடி தமிழகத்துக்கு எதிராக எந்த திட்டத்தையும் எப்போதும் கொண்டு வரமாட்டார். அது அவர் ரத்தத்திலேயே இல்லை. தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு முந்தைய மத்திய அரசு கையெழுத்திட்டது. இத்திட்டம் குறித்து பாஜக அரசு வந்ததும் விவசாயிகள் தெரிவித்தனர். திட்டம் ரத்து செய்யப்பட்டது.

Read Entire Article