சென்னை: தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான உத்திகள் குறித்து 38 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 2296 மருத்துவர்களுடனும், அரசு மருத்துவர்கள் உடன் கானொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தற்போது, தமிழ்நாட்டில் 57.3 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. மீதமுள்ள 42.7 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனையில் நடக்கும் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2024 வரை மகப்பேறு இறப்பு விகிதம் 40.4 ஆக உள்ளது. அதற்கு முன்னர் 2023-2024ம் ஆண்டு 45.5 சதவீதமாக இருந்தது. கடந்த இது ஆண்டு குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஒத்த இலக்கில் (சதவீதம்) கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மகப்பேறு தாய்மார்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் தாய்மார்களும் பொது சுகாதார இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
The post தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை: சுப்ரியா சாகு தகவல் appeared first on Dinakaran.