கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு

3 hours ago 1

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு உத்தேசமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் கோ ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொதுமேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் கோ – ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.3450- 10000 வரை இருந்த ஊதியம், ரூ.13000 முதல் 41,430 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, தலைமை பொது மேலாளருக்கு ரூ.15,600- 39,100 வரை இருந்த ஊதியம், ரூ.48000 முதல் 1,52,640 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் 2021-22ம் ஆண்டின் நிகர லாபத்தின்படி தற்போது அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதமும் அகவிலைப்படியில் இருந்து 10 சதவீதம் ஆண்டு தோறும் வழங்கும் உயர்வு 3 சதவீதமும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஒரு ஊதிய வரம்பில் ஊழியர்களுக்கு இடையே உள்ள சம்பள வித்தியாசம் சரி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article