பெரும் வீழ்ச்சியடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

4 hours ago 2

மும்பை,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பையும் அமல்படுத்தியுள்ளார். அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 26 சதவீத வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையால் உலக அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், இந்திய பங்குச்சந்தையும் இன்று வரலாறு காணாத அளவில் பெரும் சரிவை சந்தித்தது.

அதன்படி, 742 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 161 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 642 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 860 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

865 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 908 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 ஆயிரத்து 226 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 137 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 412 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 10 ஆயிரத்து 769 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

1 ஆயிரத்து 996 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 160 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த 10 மாதங்களில் இந்திய பங்குச்சந்தை சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும். இந்திய பங்குச்சந்தையில் இன்றைய வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு 19 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article