
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது,
பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்கு தயார் செய்வது கடினம். கேளிக்கை வேறு, போராட்டம் புரட்சி வேறு.
உங்களுக்கான தலைவரை பொழுதுபோக்கு தளத்தில் தேடாதீர்கள், போராட்டக்களத்தில் தேடுங்கள். உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது. உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது' என்றார்.