
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன விராட் கோலி மற்றும் படிக்கல் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
தற்போது வரை பெங்களூரு 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 52 ரன்களுடன் களத்தில் உள்ளார். படிக்கல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி 18 ரன்கள் அடித்திருந்தபோது டி20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. கிறிஸ் கெயில் - 14,562 ரன்கள்
2. அலெக்ஸ் ஹேல்ஸ் - 13,610 ரன்கள்
3. சோயப் மாலிக் - 13,557 ரன்கள்
4. பொல்லார்டு - 13,537 ரன்கள்
5. விராட் கோலி - 13,001 ரன்கள்