அறந்தாங்கி, மார்ச் 27: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் சகுந்தலா கணித மன்றம் மற்றும் கணித வேடிக்கை நாள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் துரை தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் கிளாடிஸ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறைகள் சார்பாக நடத்தபடும் போட்டித் தேர்வுகளை எவ்வாறு மாணவ, மாணவிகள் எதிர்கொண்டு வெற்றி பெறுவது என ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறை தலைவர் இணை பேராசிரியர் சண்முகசுந்தரம், விஏஓ கற்பகவல்லி, நிர்வாகவியல் துறை தலைவர் அன்பழகன், கணிததுறை பேராசிரியர்கள் பாண்டிச்செல்வி, விமலா, உதயராணி, சந்தியா மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கணிதம் தொடர்பான கோலங்கள், வினாடி வினா, பிரமிடு கணிததுறை மாணவர்கள் செய்து காட்டினர். கணிதத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நன்றி கூறினார்.
The post பெருநாவலூர் அரசு கல்லூரியில் கணித வேடிக்கை நாள் appeared first on Dinakaran.