பெரு நாட்டு அதிபர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

4 months ago 18
பெரு நாட்டின் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை வரை, பொதுவாழ்வில் இருந்து திடீரென்று அவர் காணாமல் போனார். குறிப்பிட்ட காலத்தில் அவர் எங்கு சென்றார் என்பது தெரியாத நிலையில், அதுகுறித்து நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான முன்னாள் பிரதமர் அல்பர்டோ ஓட்டரோலா, சுவாசப் பிரச்னைகளுக்காக தனது மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப்போவதாக டைனா பொலுவார்ட்டே கூறியதாகத் தெரிவித்தார். இத்தகவல் தற்போது வெளியான நிலையில், அறுவை சிகிச்சைக்கு சென்றதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமலும், தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைக்காமலும் சென்றதாக அதிபர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.  
Read Entire Article