பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு பாடம் புகட்ட வேண்டும்: வைகோ அறிக்கை

3 weeks ago 5

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் பெரியாரை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் சீமான். அவர் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது.

தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணி திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு பாடம் புகட்ட வேண்டும்: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article