பெரியவர்களைப் போலவே குழந்தைளுக்கும் உரிமை சுதந்திரம் இருக்கிறது: அமைச்சர் பேச்சு

2 months ago 7


சென்னை: எழும்பூர் தொன்போஸ்கோ சிபிஎஸ்இ மேனிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வார விழாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது: குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்பாக புகார் செய்ய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, என்எஸ்எஸ் மூலம் 1863 நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் 86 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். 8200 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

பெரியவர்களுக்கான உரிமைகள் இருப்பது போல குழந்தைகளுக்கான உரிமை என்று தனியாக இருக்கிறது. அதேபோல அவர்களுக்கு தனியாக சுதந்திரமும் இருக்கிறது. நாம் பேசுகின்ற சுதந்திரம், உரிமை போன்றவற்றை குழந்தைகளிடம் இருந்து விதைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

The post பெரியவர்களைப் போலவே குழந்தைளுக்கும் உரிமை சுதந்திரம் இருக்கிறது: அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article