பெரம்பலூர், வேப்பந்தட்டை நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

3 weeks ago 3

பெரம்பலூர், டிச.24: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சில தினங்களுக்கு முன்பு, வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கும், வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கும் நேற்று முதல் தலா ஒரு ஆயுதப்படை சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் தலா 2 இதர போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று உயர்நீதிமன்ற விடுமுறை அறிவிப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர், வேப்பந்தட்டை நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article