பெரம்பலூர், ஜன.31: பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப் பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று (30ஆம்தேதி) பெரம்பலூர் மாவட்ட எஸ்பி.ஆதர்ஷ் பசேரா தலைமையில், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன்படி இந்திய அரசியலமைப்பின் பால் இடைவிடாத உள மார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப் பட்டு விட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வ கையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாக உறுதி அளிக்கி றேன்.என்று தீண்டாமை உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலை யங்கள், மாவட்ட ஆயுதப் படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
The post பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆதர்ஷ்பசேரா தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.