பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

3 months ago 16

 

பெரம்பலூர், அக்.15: பெரம்பலூரில் பாலக்கரை அருகே கலெக்டர் அலுவலக சாலையில், தனியார் பைக் ஷோரூம் எதிரே சாலையோரத்தில் உள்ள புங்கன் மரத்தில், பெயர், முகவரி தெரியாத, அடையாளம் தெரிந்த சுமார் 30 வயது மதிக்கத் தக்க ஆண் நபர் ஒருவர், நேற்று காலை 8 மணிஅளவில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருப்பது கண்டறியப் பட்டது. இறந்தவர் ப்ளூ கலர் லோயர், சந்தன கலர் முழுக்கை சட்டை அணிந்துள்ளார். வலது முழங்கை அருகில் ஜோதி என்ற பெயரில் பச்சை குத்தி உள்ளார், வலது தோள்பட்டையில் ஏற்கனவே ஆபரேஷன் செய்த தழும்பு உள்ளது. இறந்துபோன நபர் சம்பவ இடத்தில் உள்ள புங்கன் மரத்தில் மோட்டாருக்கு பயன்படுத்தும் ரப்பர் பெல்டால் தூக்கு மாட்டி இறந்துள்ளார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம் பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட நபர்குறி த்து தீவி ரமாக விசாசார ணை செய்து வருகின்றனர்.

The post பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article