
சென்னை,
நிப்/டக், சார்ம்ட் , பென்டாஸ்டிக் போர் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்ற ஜூலியன் மெக்மஹோன், புற்றுநோயுடன் நீண்டகாலமாக போராடி தனது 56-வது வயதில் காலமானார். அவரது மனைவி கெல்லி மெக்மஹோன், இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மெக்மஹோன் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் (1971–1972) சர் வில்லியம் மெக்மஹோனின் மகன் ஆவார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு நிப்/டக்கில் டாக்டர் கிறிஸ்டியன் ட்ராய் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். இவரது கதாபாத்திரம் கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மெக்மஹோன், ''பென்டாஸ்டிக் போர்'' (2005) மற்றும் அதன் தொடர்ச்சியான '''ரைஸ் ஆப் தி சில்வர் சர்பர்'' (2007) ஆகியவற்றில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.