சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவி: துணை முதல்-அமைச்சர் வாழ்த்து

3 hours ago 2

இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 500 மீட்டர் பந்தயத்தில் 6 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக, ஹோலி கிராஸ் ஆங்கில இன்டியன் பள்ளியில் பயிலும் எல்கேஜி மாணவி "அன்விதா சிவக்குமார்" 5 வயது ஐபிஎன் அகடமி சார்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். மேலும் அந்த மாணவி 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தமிழக விளையாட்டுத்துறைக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தமிழக அரசு விளையாட்டுத்துறையில் மேற்கொள்ளும் ஊக்கமும் ஆக்கமுமே தூத்துக்குடியைச் சேர்ந்த 5 வயது சிறுமி சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மன தைரியத்துடன் கலந்து கொண்டு சாதனை படைக்க முடிந்துள்ளது. அந்த சாதனையை பெற்ற மாணவியை சென்னைக்கு வரவழைத்து பசுமை வழி சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது திறமையின் மூலமாக சாதனைகள் பல தொடர வேண்டும், வெற்றிகள் குவிய வேண்டும் என்றும் மாணவியிடம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Read Entire Article