உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 15 ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல் அமைச்சர்

4 hours ago 2

சென்னை,

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வரும் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடைக்கோடி மக்களுக்கும் அரசுத் துறை திட்டங்கள் அவர்கள் வசிக்குமிடத்திற்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். முகாம் பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஜூலை 15-ந் தேதி தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும் நகர பகுதிகளில் 13 அரசு துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும். இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசு துறைகளின் 46 சேவைகளை மக்கள் பெறலாம். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் வீட்டிற்கே தன்னார்வலர்கள் வந்து கொடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article