பெண்ணைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

2 hours ago 3

 

தேனி, மே 23: போடி அருகே சிலமலையை சேர்ந்தவர் முருகன்(58). இவர் ஆடு, மாடு தரகர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த கணவனை இழந்த சுமதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சுமதியை பார்க்க சென்ற முருகனுக்கு சுமதியின் வீட்டருகே குடியிருந்த கண்ணன் மனைவி முருகேஸ்வரி என்பவருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், முருகேஸ்வரி, தரகர் முருகனுக்கு ரூ.7 ஆயிரம் கடன்பெற்றுத் தந்துள்ளார். இந்த பணத்தை முருகன் திருப்பித்தராததால் முருகேஸ்வரி, தரகர் முருகனை அவமானப்படுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், கடந்த 2018ம் ஆண்டு செப்.16ம் தேதி முருகேஸ்வரியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து, புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தேனியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்.குருவராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நீதிபதி அனுராதா முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

 

The post பெண்ணைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article