செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (44), இவரது மனைவி சுகன்யா (38). வெங்கடேசன் மலேசியாவில் தங்கி வேலை செய்து வருகின்றார் இதில், சுகன்யா புதுப்பாக்கம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சகன்யாவின் கடைக்கு அருகே கடை நடத்தி வருபவர் குமார் (56). சுகன்யா கடைக்கு வாடிக்கையாளராக வரும் குமார் தினமும் சுகன்யாவிடம் பேசி வந்துள்ளார். சுகன்யா கடைக்கு குமார் வருவதை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள் இருவரையும் தறவாக பேசியுள்ளார். இந்நிலையில், சுகன்யா கடைக்கு வந்த குமாரிடன் நீங்கள் இனி என்னுடைய கடைக்கு வர வேண்டாம். என்னையும் உங்களையும் தவறாக பேசுகின்றனர். இனி நான் உங்களிடம் பேசமாட்டேன் என குமாரிடம், சுகன்யா திட்டவட்டாரமாக தெரிவித்துள்ளார்.
சுகன்யா, குமாரிடம் பேசாததால் ஆத்திரமடைந்த குமார், சுகன்யா கடைக்கு நேரில் சென்று கடந்த 2022ம் ஆண்டு பெட்ரோல் ஊத்தி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் சுகன்யா கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சுகன்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சுகன்யா ஏற்கவே இறந்து விட்டுதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சுகன்யாவின் சகோதரர் தஞ்சாவூரை சேர்ந்த ரவி (41) என்பவர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி நேற்று குற்றாவாளியான குமாருக்கு ஆயுள் தண்டனையும் ₹5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குமாரை போலீசார் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
The post பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டணை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.