பெண்கள் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

3 months ago 24

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கணைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். .இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Read Entire Article