
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் 545 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இனி 550 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.