ஓட்டுநர் பயிற்சி கார், லாரி மீது மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு...4 பேர் படுகாயம்

5 hours ago 4

சென்னை,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கார் வேகமாக சென்று திரும்பிய போது பின்னால் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது .

இந்த விபத்தில் காரில் ஓட்டுநர் பயிற்சி ஈடுபட்டிருந்த 5 பெண்கள் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .

இதில் வாணியம்பாடி நீலிக்கொல்லி பகுதியை சேர்ந்த நாபியா ஷபாகத் (வயது 38) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Read Entire Article