பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு

5 months ago 34

ஷார்ஜா,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது . 

Read Entire Article