பெண் தொண்டரை நிர்வாணப்படுத்தி, சிறுநீர் கழித்து கும்பல் பலாத்காரம்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கொடூர முகம்

4 hours ago 3

பெங்களூரு,

கர்நாடகாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முனிரத்னா. இவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த 40 வயது பெண் தொண்டர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கும்பல் பலாத்காரம் தொடர்பான புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

அந்த புகாரில் கொடுமையான விசயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பெண் தொண்டரை, உதவியாளாக இருந்த 2 கூட்டாளிகளை விட்டு கும்பல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு உள்ளது.

2023-ம் ஆண்டு ஜூன் 11-ல், மதிகெரே பகுதியில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்திற்கு பெண்ணை வரவழைத்து இந்த கொடிய சம்பவம் நடந்துள்ளது என புகார் தெரிவிக்கின்றது. முனிரத்னா சார்பில் பெண் தொண்டருக்கு எதிராக முதலில் பொய்யான புகார்கள் அளிக்கப்பட்டன.

இதனால் கைது செய்யப்பட்ட அந்த பெண் பின்னர் விடுதலையானதும், அவரை முனிரத்னா எம்.எல்.ஏ.வின் ஆட்கள் சந்தித்தனர். வழக்கை தீர்க்க உதவ, அவர் அழைக்கிறார் என கூறி அழைத்து சென்றனர்.

இதன்பின்பே, இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெண் அளித்த புகாரில், முனிரத்னாவும், 2 கூட்டாளிகளும் ஆடைகளை நீக்கி நிர்வாணப்படுத்தினர். பலமுறை கெஞ்சியும் கேட்கவில்லை. இல்லையென்றால் பெண்ணின் மகனை கொன்று விடுவோம் என மிரட்டினர்.

இதன்பின்பு, 2 கூட்டாளிகளையும் அந்த பெண்ணை கும்பல் பலாத்காரம் செய்ய முனிதரத்னா உத்தரவிட்டார். பலாத்காரத்தின்போது, முனிரத்னா பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பெண் தொண்டருக்கு, முனிரத்னா ஊசியை செலுத்தினார் என புகார் தெரிவிக்கின்றது. இதனை வெளியே கூறினால், குடும்பத்தில் ஒருவரும் தப்ப முடியாது என அந்த பெண்ணை மிரட்டியிருக்கிறார் என எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது.

இதனால், நடப்பு ஆண்டு ஜனவரியில் தீராத நோய் வந்து விட்டது என்று அந்த பெண் கூறியுள்ளார். அவர், கொடிய வைரஸ் கொண்ட ஊசியை செலுத்தியிருக்க கூடும் என அவர் சந்தேகம் தெரிவித்து உள்ளார். கடந்த 19-ந்தேதி தூக்க மருந்து எடுத்த அவர், பின்னர் போலீசில் புகார் அளிப்பது என முடிவு செய்துள்ளார்.

போலீசார், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் பிறருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article