பெண் கொலை வழக்கு தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை

3 months ago 9

 

கரூர், பிப். 15: பெண் கொலை வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மூலிமங்கலம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுபோல் முர்மு என்பவர், கடந்தாண்டு ஜனவரி 7ம்தேதி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சுபோல் முர்முவை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு, கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கொலை செய்த குற்றத்திற்காக சுபோல் முர்முவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை, சிறப்பாகவும், விரைவாகவும் விசாரணை செய்த வேலாயுதம்பாளையம் போலீசார்களை மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

The post பெண் கொலை வழக்கு தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article