பெண் காவலருக்கு செல்போன் வழியே பாலியல் தொல்லை கொடுத்த ஜேசிபி உரிமையாளர் கைது

3 months ago 15
தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு செல்போன் வழியே பாலியல் தொல்லை கொடுத்ததாக விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்காவலர் விருத்தாசலத்தில் பணியாற்றியபோது விஜயகுமாரின் ஜேசிபி வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளது. அது தொடர்பாக தனது செல்போனில் விஜயகுமாரை பெண்காவலர் விசாரணைக்கு அழைத்ததாகவும் அப்போது அவரது எண்ணைப் பதிவு செய்து வைத்துக் கொண்ட விஜயகுமார், அடிக்கடி ஆபாச செய்திகளை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Read Entire Article