பெட்டிக்கடைக்குள் கார் புகுந்து மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாப சாவு

6 hours ago 5

திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நேற்று புச்சிரெட்டிபாளயத்தில் நடந்த நண்பர் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் நெல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கோவூர் அருகே வந்த போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த ரமணய்யா என்பவர் நடத்தி வரும் பெட்டி கடைக்குள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 மாணவர்களும், ரமணய்யாவும் பரிதாபமாக இறந்தனர்.

The post பெட்டிக்கடைக்குள் கார் புகுந்து மருத்துவ மாணவர்கள் 5 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Read Entire Article