சென்னை : சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி 3 பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளுர்-ஸ்ரீபெரும்புதூர் வரை 31 கி.மீ. ரூ.2689 கோடி மதிப்பீட்டில் ஆறுவழிச் சாலை திட்டப் பணி தொடங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் இருந்து துறைமுகம் வரும் கனரக வாகனங்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எல்லை சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல் ஆகியவற்றை குறைப்பதற்காக சென்னை எல்லை சாலைத் திட்டத்தை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை 132.87 கிமீ தூரத்துக்கு பல்வேறு கட்டங்களாக சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் பகுதி-3-இன் கீழ், திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் வெங்கத்தூர் வரை 10.4 கி.மீ தூரத்திற்கும், வெங்கத்தூர் முதல் செங்காடு வரை 10 கிமீ தூரத்திற்கும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.7 கி.மீ அளவிலும், இப்படி சுமார் 30 கிமீ தூரத்துக்கு, ரூ.2689.74 கோடி செலவில் புதிய ஆறுவழிச்சாலை மற்றும் இருவழி சேவைச் சாலை அமைப்பதற்கான பணிகளை திருவள்ளூரில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளை அறிவுறுத்தினோம். இந்த சாலைப்பணி நிறைவுற்றால், தமிழ்நாட்டின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, தொழில்துறை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
The post எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி 3 பணியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.