பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்

4 weeks ago 3

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கடந்த 5ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி, துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/ காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் உடனிருந்தார்.

 

The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article