சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு – ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் சீரமைப்பு நீளம் சுமார் 20 கி.மீ. ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி வரை கட்டுமானச் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என தெரிவிக்கப்பட்டது.
The post கோயம்பேடு – ஆவடி புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு..!! appeared first on Dinakaran.