பெங்கால் அபார வெற்றி

1 month ago 5

பெங்களூரு: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டி பெங்களூருவில் நேற்று, சண்டிகார், பெங்கால் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற சண்டிகார் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்கால் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. 10வது விக்கெட்டுக்கு ஆடிய முகம்மது ஷமி 17 பந்துகளில் 32 ரன் எடுத்து அதிரடி காட்டினார். பின் களமிறங்கிய சண்டிகார் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து தோல்வியை தழுவியது. 4 விக்கெட் வீழ்த்திய சயான் கோஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை தொடர்ந்து பெங்கால் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

The post பெங்கால் அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article