பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு; பயணிகள் அதிர்ச்சி

2 months ago 12

பூரி,

ஒடிசாவில் பத்ரக் பகுதியருகே சென்று கொண்டிருந்த பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி பூரி நகரின் அரசு ரெயில்வே போலீஸ் காவல் நிலைய உயரதிகாரி எஸ்.கே. பாஹினிபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, பத்ரக் பகுதியை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பின்னர், அரசு ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். அந்த ரெயில் பூரி நகரை பாதுகாப்பாக சென்றடையும் வகையில் அவர்கள் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை வழங்கினர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அடங்கிய 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றார்.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது. பயணிகள் அனைவரும் அந்த பெட்டியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article