ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வங்காளதேச வீரர்

3 hours ago 1

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸ், வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ், பாகிஸ்தானின் பாத்திமா சனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது வென்றவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸும், ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸும் வென்றுள்ளனர்.


Shining with bat and ball, Bangladesh's star all-rounder claims the ICC Men's Player of the Month for April 2025 ️

— ICC (@ICC) May 14, 2025


A stellar all-round run in the Women's Cricket World Cup Qualifier 2025 sees Scotland's ace take home the Player of the Month award for April ️

— ICC (@ICC) May 14, 2025


Read Entire Article