பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 200 பேர் பலி

5 hours ago 1

 

ஒவ்கடங்கு,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதனிடையே, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சில ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ராணுவத்திற்கு ஆதரவாக சில ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் சவும் மாகாணம் டிஜிபா நகரில் அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பினர் கடந்த சில நாட்களாக அதிரடி தாக்குதல் நடத்தினர். அந்நகரில் உள்ள ராணுவ தளம், பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 200 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

Read Entire Article