பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

2 months ago 8


பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்கள். சீனா தனியாக விண்வெளி மையத்தை நிறுவி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றது. தியாங்காங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி மையம் கடந்த 2022ம் ஆண்டு முதல் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி யீ காங்பூ, லி காங் மற்றும் லி காங்சூ ஆகிய 3 விண்வௌி வீரர்கள் ஷென்ஷோ-18 விண்கலம் மூலமாக விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி மேலும் பெண் ஒருவர் உட்பட 3 விண்வெளி வீரர்கள் கொண்ட புதிய குழு விண்வெளி மையத்தை அடைந்தனர். இதனை தொடர்ந்து சுமார் 192 நாட்கள் விண்வெளியில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த விண்வெளி வீரர்கள் நேற்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்கள். இவர்கள் ஷென்சோ-18 விண்கலத்தின் மூலமாக வடக்கு சீனாவின் மங்கோலியாவில் நேற்று முன்தினம் இரவு தரையிறங்கினார்கள்.

The post பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article