சேலம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகள் 60 பேர் விலகியுள்ளதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த நவம்பர் முதல் சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் தங்கதுரை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம் தன்னுடன் பயணித்த வந்த 40 பேருடனும், மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் தன்னுடன் 100 பேருடனும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் இளைஞர் பாசறை செயலாளர் சுதாகரன் தன்னுடன் 120 பேருடனும், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஷ், மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் நாகம்மாளுடன் 30 பேரும், மேட்டூர் சட்டமன்றதொகுதி துணை தலைவர் ரகு தன்னுடன் 500 பேருடனும், சேலம் ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் தன்னுடன் 50 பேருடனும் அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் சங்கர், ஏற்காடு சட்டமனற் தொகுதி நிர்வாகி சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் 200 பேர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சேலம் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் தமிழரசன் தலைமையில் 60 பேர் அடிப்படை உறுப்பினரிலிருந்து தாங்கள் விலகி கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கட்சியில் சரியான தலைமை பண்பு இல்லை. கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. இதனால் கட்சியில் இருந்து என்னுடன் பயணித்த 60 உறுப்பினர்களும் விலகி உள்ளோம் என்றார்.
The post நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் நிர்வாகிகள் 60 பேர் விலகல் appeared first on Dinakaran.