பூந்தமல்லி – பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து

3 days ago 2

சென்னை: சென்னை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குளிர்பான கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் குடோனில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக கரும்புகை அதிகளவில் வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் குளிர்பான கிடங்கில் பணியாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

45 நிமிடங்களுக்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணமா குறித்து பூந்தமல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையாக தீயை அணைத்த பிறகே தீயில் எரிந்த பொருட்கள் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பூந்தமல்லி – பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article