காங்கிரஸ் நிர்வாகி தி.நகர் ஸ்ரீராம் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் வழிபாடு

2 days ago 3

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதி குழு உறுப்பினர் தி.நகர் ஸ்ரீராம் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி, காங்கிரஸ் நிர்வாகிகள் திருவான்மியூர் எஸ்.மனோகரன், முன்னாள் கவுன்சிலர் சைதை டி.வில்லியம்ஸ், ஆர்.மலர்கொடி, புதூர் டி.பிரகாஷ் ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இன்று மாலை வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுக்கப்பட உள்ளது. 30ம்தேதி காலை ஸ்ரீகாளிகாம்பாள் கோயில், ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில், ஸ்ரீ பாம்பன் சுவாமி ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

வேளச்சேரி மெயின் ரோட்டில் கிண்டியில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபையில் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது. தரமணி அடுத்த பள்ளிபட்டு கானத்தில் சே சமய ஜெயம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, தி.நகரில் உள்ள காக்கும் கரங்களில் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்ந நிகழ்ச்சிகளின் போது ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

The post காங்கிரஸ் நிர்வாகி தி.நகர் ஸ்ரீராம் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article