உசிலம்பட்டியில் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி என்கவுன்ட்டர்..!!

2 days ago 2

மதுரை: உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, கள்ளபட்டியைச் சேர்ந்த முதல் நிலை காவலர் முத்துக்குமார் (40). உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய போது காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய போது காவலரை கொலை செய்தனர். அவருடன் உடனிருந்த ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், அவருக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து காவலர் முத்துகுமாரை கல்லால் அடித்து கொலை செய்தது கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கொலை வழக்கில் பொன்வண்ணனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர். அப்போது கைது செய்ய சென்ற போலீசாரை பொன்வண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.

The post உசிலம்பட்டியில் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி என்கவுன்ட்டர்..!! appeared first on Dinakaran.

Read Entire Article