பூதலூர் வட்டம் அய்யாசாமிபட்டிக்கு புதிய வழித்தட பேருந்து

2 weeks ago 2

 

திருக்காட்டுப்பள்ளி, ஜன.25: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் அய்யாசாமிபட்டிக்கு தஞ்சையில் இருந்து நகர பேருந்து புதிய வழித்தடம் துவக்க விழா அய்யாசாமிபட்டியில் நேற்று காலை நடைபெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமலை சமுத்திரம் வரை இயங்கி வந்த தடம் எண் வி74நகர பேருந்து, தட நீட்டிப்பு செய்யப்பட்டு அய்யாசாமிபட்டி வரை இயக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்து பேருந்து துவக்க விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் மற்றும் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன், உதவி மேலாளர் (வணிகம்) தமிழ்செல்வம், தஞ்சாவூர் கிளை மேலாளர் சந்தனராஜ், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post பூதலூர் வட்டம் அய்யாசாமிபட்டிக்கு புதிய வழித்தட பேருந்து appeared first on Dinakaran.

Read Entire Article