பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..

2 months ago 14
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விலகூர்கல் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில் வீட்டின் தகர கூறையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி தோட்டா ஒன்று வீட்டின் ஷோபாவில் கிடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த மலையின்கீழ் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்குந்நிமலை விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் அங்கு விமானப்படை வீரர்கள் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட போது வெளியேறிய தோட்டாவாக இருக்கலாம் எனவும்  தெரிவித்தனர்.
Read Entire Article