பூஜையுடன் தொடங்கியது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2 - தாண்டவம்'

3 months ago 23

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ஒன்றாக அமைந்தது. 

இந்த மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது 'அகண்டா 2 - தாண்டவம்' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, பிரபல தெலுங்கு இயக்குனரான போயபதி சீனு இயக்கத்தில் மீண்டும் இணைகிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா. 

அதன்படி, இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. பாலகிருஷ்ணா வசனம் பேசும் காட்சிகளுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரியவுள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்குமா அல்லது புதிய கதையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

#Akhanda2 - Thaandavam Dailouge By #Balayya pic.twitter.com/5qeqn35Bcu

— Milagro Movies (@MilagroMovies) October 16, 2024
Read Entire Article