தேவையான பொருட்கள்:
சக்கரைப் பவுடர் – 500 கிராம்
வெண்ணெய் – 400 கிராம்
நெய் – 100 கிராம்
தேங்காய் – 1
வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
கஸ்டர்டு பவுடர் – 2 டீஸ்பூன்
பூசணி – 500 கிராம்
செய்முறை:
பூசணிப்பத்தையை தோல் நீக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயை க்ரீம் போல அடித்துக் கொண்டு அதில் சக்கரையைச் சேர்த்துக் கலக்கி அடிக்கவும். தேங்காயைப் பால் பிழிந்து அதில் வாசனைப் பவுடர், எசன்ஸ், கஸ்டர்டு பவுடர், கோல்டன் சிரப் முதலியவற்றைக் கலந்து, வெண்ணெய்க் கலவையுடன் சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். பின் பூசணியைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். கலவை கெட்டியாகிவிட்டால் மைதா மாவைச் சேர்த்துக் கொள்ளலாம். கலவையைத் தயாரித்துக் கொண்டு தகர ட்ரேயில் வெண்ணெய் தடவி, ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். 1/2 மணி நேரத்தில் வெந்து விடும். சுவையான பூசனிக்கேக் தயார்.
The post பூசனிக்காய் கேக் appeared first on Dinakaran.