பூங்காவை முறையாக பராமரிக்க கோரி வழக்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு

7 months ago 24

 

மதுரை, அக். 16: பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த சுருளிராஜன் கருப்பணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை நத்தம் சாலையில் ஊமச்சிகுளத்தில் அரசு கண்மாயை பல லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. கண்மாயின் 4 புற கரைகளில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் அருகே சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் குப்பை மேடாக காட்சியளிப்பதுடன் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே, கண்மாய் மற்றும் பூங்காவை முறையாக பராமரிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் மனுவிற்கு மதுரை மாநகராட்சி ஆணையர், ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்.29க்கு தள்ளி வைத்தனர்.

The post பூங்காவை முறையாக பராமரிக்க கோரி வழக்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article