பூங்கா அமைக்க வீடுகள் அகற்ற எதிர்ப்பு: மண்டல அலுவலகம் முற்றுகை

1 week ago 3


திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் கருணாநிதி நகர் 1, 2, மற்றும் சாஸ்திரி நகர் 1வது தெரு ஆகிய தெருக்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்திவிட்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எண்ணூர் நெடுஞ்சாலையில் பூங்கா அமைக்கப்போவதாகக் கூறி அங்கு குடியிருக்கும் வீடுகளில் அளவீடு செய்து இடிக்கப் போவதாக கூறியிருந்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், லோகநாதன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து இந்த பகுதியில் வீடுகளை அகற்றக்கூடாது என்று கோரிக்கை மனுவை மண்டல அதிகாரியிடம் அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பூங்கா அமைக்க வீடுகள் அகற்ற எதிர்ப்பு: மண்டல அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article