![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35672988-dsp.webp)
சென்னை,
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதில், ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனமாடியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் கடந்த மாதம் வெளியாகி இதுவரை ரூ. 1,800 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதில், கிஸ்ஸிக் என்ற பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா கவர்ச்சி நடனமாடியிருந்தார். இதனையடுத்து, இதன் 3-ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும்நிலையில், இதில் யார் கவர்ச்சி நடனம் ஆடுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடனமாட தான் விரும்புவதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்திருக்கிறார். மேலும், சாய் பல்லவியுடன் பணியாற்ற விரும்புவதாகவும், அவருடைய நடனத்திற்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறினார்.