'புஷ்பா 2 ரீலோடட்' ரிலீஸ் தேதியில் மாற்றம்!

3 weeks ago 4

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.1850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படத்தின் வசூலான ரூ.1790 கோடியை கடந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி 'புஷ்பா 2 ரீலோடட்' என்ற பெயரில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதாவது, 3 மணி 20 நிமிடம் கொண்ட இப்படம், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடமாக வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் 'புஷ்பா 2 ரிலோடட்' பதிப்பின் வெளியீட்டு தேதியில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, தொழில்நுட்பக் காரணங்களால் புதிய பதிப்பு 11-ம் தேதி வெளியாகாது என்றும், அதற்கு பதிலாக 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 

Read Entire Article